Wednesday, December 2, 2009

கரும்பை இரும்பாக்கிய ஸ்ரீ கரும்பாயிரம் கொண்டவர்



ஸ்ரீ கரும்பாயிரம் கொண்டவர் கோயில் அரியலூருக்கு அருகில் குணமங்கலம் என்ற கிராமத்தில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ கரும்பாயிரம் கொண்டவர் ஆவார். இவர் கரும்பை இரும்பாக்கிய கரும்பாயிரம் கொண்டவர் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் குல தெய்வ வாசிகள் வருடம் தோறும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் வினாயகர், மதுரை வீரன், செல்லியம்மன், ஐயனார் மற்றும் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். அனைத்து தெய்வங்களுக்கும் முறைப்படி குலதெய்வ வாசிகள் உள்ளனர். இக்கோவிலினை நிர்வகிக்க நிர்வாககுழு உள்ளது. பூசாரி ஒருவர் எந்நேரமும் இக்கோவிலில் உள்ளார். கேட்டதை கொடுக்க கூடிய ஸ்ரீ கரும்பாயிரம் கொண்டவர் அக்கிராமத்தில் அனைத்து மக்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளதோடு, அனைத்து குல தெய்வ வாசிகளையும் காத்து அருள் புரிந்து வருகிறார். அவரின் குலதெய்வ வாசிகள் பல்வேறு உன்னத இடங்களில் உள்ளனர். மேலும் இக்கோவிலை சுற்றி மிலகாய், மல்லி, கத்தரிக்காய், துவரை, வேர்கடலை, கம்பு, கேழ்வரகு மற்றும் பல சத்து மிகுந்த பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. இதனை இயற்கை எழிலோடு நாம் கண்டு களிக்கலாம்.

ஸ்ரீகரும்பாயிரம் கொண்டவர் துணை

No comments:

Post a Comment